இலங்கையில் மூன்று லட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
srilanka
covid19
corona
government
peoples
By S P Thas
இலங்கையில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளமை சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பேணாவிடின் மீண்டும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இதேவேளை, நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணி வரை 1850 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 303 682 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 273 496 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 25 928 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி