வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரத்தினபுரி, எலபாத்த பகுதியில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் அதிக மழையுடனான வானிலை நிலவுவதனால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
மழையுடனான வானிலையையடுத்து பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் எனவும் இதனால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல்களுக்கு அமைய தேவையேற்படின் இடம்பெயரத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அவிசாவளை (Avissawella) – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதன்போது 78 வயதான , 36 மற்றும் 07 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, தாய் மற்றும் தாத்தா ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கை, களு கங்கை, கிங் மற்றும் நில்வள கங்கைகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹாவில் (Gampaha) வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |