பதுக்கப்பட்டிருந்த மூவாயிரம் லீட்டர் டீசல் மீட்பு: 33 வயதுடைய நபர் கைது
3000 லீட்டர் டீசல்
வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் நேற்று விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடையொன்றினை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த கடையின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீட்டர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.
33 வயதுடைய நபர் கைது
இதனையடுத்து குறித்த 15 பெரல்களில் காணப்பட்ட 3000 லீட்டர் டீசல்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடையின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
