புத்தாண்டு முதல் அதிகரிக்கவுள்ள முச்சக்கர வண்டி கட்டணங்கள் : வெளியான அறிவிப்பு
பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பின் பின்னணியில் முச்சக்கர வண்டிகளின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் (01) இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டணம் அதிகரிப்பு
முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பயணிகளின் முதல் கிலோ மீற்றருக்கான விலையே அதிகரிக்கும் என முன்னர் அறிவித்திருந்து.
இந்நிலையில், தற்போது முதல் கிலோ மீற்றருக்கான விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது என்றும், இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணத்திலேயே அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்பிரகாரம், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை அதிகரித்தால்
கடந்த 29 ஆம் திகதியன்று அடுத்த ஆண்டு முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி,பெட்ரோல் விலை அதிகரித்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என கூறியிருந்தது.
அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் பெருமதி சேர் வரியில் ஏற்படவுள்ள அதிகரிப்பே இந்த கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.