அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை : வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால், எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்பட்டு, எரிபொருளுக்கு 10.5% வரி மட்டுமே விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி