வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்சரவண்டி! இரு சிறுவர்கள் பலி
Death
Accident
Welioya
Hambegamuwa
Tanamalvila
By Chanakyan
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா – தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மயிலவல பகுதியில் வெலிஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள், எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி