நீர்கொழும்பில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் மாயம்
Sri Lanka Police Investigation
Negombo
By Vanan
நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நீர்கொழும்பு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சத்திய மூர்த்தி சிறிவிந்த் (21), வடிவேல் ஆனந்த குமார் (23) மற்றும் ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஷ்மன் (23) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.
மேலதிக விசாரணை

இன்று(23) மதியம் முதல் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இளைஞர்களுடன் நீராட வந்த மற்றுமொரு இளைஞன் இது தொடர்பில் நீர்கொழும்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி