துணுக்காய் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டது
temple
quarantine
thunukkai
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் நேற்றைய தினம் பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னாதான நிகழ்வின் போது ஆலய தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் கலந்து கொண்டார்கள் என்றும்,
அண்மையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியினால் 12-08-2021 திகதி இடப்பட்டு வெளியிடப்பட்ட வழிபாட்டிடங்களில் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை அமுல் படுத்தல் தொடர்பான அறிவித்தல்களுக்குற்பட்டும் குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆலயத்தில் பூஜை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பூசகர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி