ரி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள 60 பெண் சமூக செயற்பாட்டாளர்
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி TID யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், இன்றைய தினம் (04) அவரை முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை (Trincomalee) பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சமூக செயற்பாட்டாளர்
இதனடிப்படையில், இன்று (04) காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் கடந்த பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |