நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காகச் செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டின் வரி அடித்தளத்தை விரிவுபடுத்துவதுடன், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் சட்ட நடவடிக்கை
2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் 2024 ஜனவரி 01 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் 18 வயதை அடைந்த அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.

பதிவு செய்யாத நபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (eservices.ird.gov.lk) ஊடாகப் பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
இதனால், 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நிதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் (TIN) அடையாள இலக்க சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |