வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
அதற்கமைய வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்திருந்தது.
தாமதமாகும் வரி செலுத்துவோர் அடையாள எண்
பின்னர் பெப்ரவரி மாத இறுதிக்குள் அடையாள எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாத இறுதிக்குள் இலக்கங்களை வழங்கி முடிக்க முடியாததால் இந்த திட்டம் ஏப்ரல் மாதம் வரை தாமதமாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் புதிய பயனாளிகளுக்கு அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விண்ணப்பங்கள் கோருதல் போன்ற பணிகள் இடம்பெற்று வருவதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள இலக்கத்தைக் குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் TIN இலக்கத்தைப் பெறலாம்” என ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |