இளைஞர்களிடையே வேகமாக பரவும் நோய்த்தொற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Laksi
நாட்டில் இளைஞர்களிடையே டினியா (Tinea) எனப்படும் தோல்நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தோல்நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்துள்ளார்.
டினியா எனப்படும் இந்த நோயானது பூஞ்சை தொற்றினால் (Fungal infection) பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய சிகிச்சைகள்
இந்த நோய்க்கான உரிய சிகிச்சைகள் காணப்பட்டாலும் அவை முறையாக வழங்கப்படாமையினால், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மந்த நிலையை அடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தகுதி வாய்ந்த வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி