மற்றொரு அதிர்ச்சி வீடியோ: கே.ஜீ.எப். திரைப்படப் பாணியில் ரீ.எம்.வி.பி. செய்யும் அராஜகம்!!
அது கே.ஜீ.எப். திரைப்படப் பாணியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு அடாவடித்தனம் என்று கூறப்படும் அளவிற்கான ஒரு அராஜகம்.
மட்டக்களப்பு மாநகரின் நடுவே ஓடிக்கொண்டிருக்கின்ற வாவியை அடைத்து மீன் வளர்க்கின்றார்கள்.
மக்கள் நெருக்கமாக வாழுகின்ற இடங்களில் பாதுகாப்பு கமெராக்களைப் பூட்டியும், ட்ரோன் கமெராக்களைப் பறக்கவிட்டும் அடாவடி புரிகின்றார்கள்.
கேள்வி கேட்க விளையும் பொதுமக்களைத் தாக்குகின்றார்கள்.
கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி வலம்வருகின்றார்கள்.
காவல்துறையிடம் முறைப்பாடு செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லை.
தமது உயிருக்கு ஆபத்து என்று தமிழ் மக்கள் அச்சப்படுகின்றார்கள்.
நகரின் மத்தியில் இத்தனை அடாவடிகளையும் புரிந்துகொண்டிருக்கின்ற நபர்கள் யார்?
அவர்களது அரசியல் பின்புலம் என்ன?
இந்த நவீன நூற்றாண்டிலும் மட்டக்களப்பு நகரின் நடுவே ஒரு ஆயுதக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஒரு அராஜகம் பற்றிய பதிவுதான் இந்த வீடியோ