ஒட்டுக்குழுக்கள் போன்றது அல்ல இலங்கை தமிழரசுக்கட்சி: சாணக்கியன் வெளிப்படை
இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியதுவமானது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட கிளையின் நிர்வாக கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் முக்கியத்துவம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை தமிழரசுக்கட்சி ஜனநாயக ரீதியான கட்சியென்பதுடன் ஜனநாயக ரீதியாகவே செயற்படும்.ஒட்டுக்குழுக்கள் போன்று அச்சுறுத்தி கட்சிசெய்யமுடியாது.அனைவருக்கும் கருத்து தெரிவிப்பதற்கான ஜனநாயகத்தினை வழங்கியுள்ளது.
கட்சிகள் பல இன்று மாநாடுகளை நடாத்துகின்றது.ஆனால் அக்கட்சிகளின் மாநாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியதுவமானது என்பதை இதன் மூலம் அனைவரும் உணர்ந்துகொள்ளமுடியும்.
கட்சியின் தலைமை தெரிவு
கருணா போன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை யாரும் செவிமடுப்பதில்லை.அவர் வருவதும் கருத்து தெரிவிப்பதையும் யாரும் கருத்தில்கொள்வதில்லை.” என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |