இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

Tamils TNA M A Sumanthiran S. Sritharan Election
By Shadhu Shanker Jan 20, 2024 11:41 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவிற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் சிவஞானம் சிறீதரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், தனக்கு வாக்குகளை வழங்குமாறும், தமிழரசுக் கட்சியின் தலைவராக அவரை தெரிவுசெய்யும் பட்சத்தில், ஈழத்தமிழர்களுக்கு தான் செய்யகூடிய விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,

“ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் நானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து தாங்களும் அறிவீர்கள்.

இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | Tna Election Sridharan Report For Eela Tamils Sl

நாளை 2024.01.21 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் தங்களின் பெறுமதிமிக்க வாக்கினை எனக்கு வழங்கி, ஈழத்தமிழர்களால் மானசீகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்னைத் தெரிவுசெய்யும் பட்சத்தில், எமது மக்களின் அரசியல் உரித்துக்கோரிய தார்மீகப் போராட்டத்தில் எனது போக்கும், கட்சியின் இயங்குநிலையும் கீழ்வரும் கொள்கை நிலைப்பாடுகளுடன் கூடியதாக அமையும் என உறுதி கூறுகிறேன்.

ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதிசெய்வதற்கான முன்னகர்வுகள்

தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையென்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதையும், தமிழர் தேசத்தைத் தாங்கும் தூண்களாக உள்ள நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவையும் அழிக்கப்படுவதே.

இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள மக்கள் கருதுவதாலேயே இவ் அழிப்பு இடம்பெறுகிறது.

சிங்கள - பௌத்த சித்தாந்தமும், ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதற்கான அரச இயந்திரமும், இவ்வழிப்பு நடவடிக்கைகளில் பங்காற்றுகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இவ்வழிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

இதற்கு கோட்பாட்டு அடிப்படையில் தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்பன ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். அரசியல் யாப்பு ரீதியாக வடக்கு - கிழக்கு இணைப்பு, சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக பங்குபற்றுவதற்கான பொறிமுறை, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | Tna Election Sridharan Report For Eela Tamils Sl

இது தொடர்பாக சிங்கள தேசத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும். அதனடிப்படையில் கீழ்வரும் இலக்குகளை நோக்கியதாகவே எனது பயணம் அமையும் என்பதை தங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சிறீதரனின் இலக்குகள்

 தேசிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புதல்.

 புவிசார் அரசியலில் பங்காளிகளாகுதல்.

 சமூகமாற்ற அரசியலை முன்னெடுத்தல்.

 அடிப்படைச் சக்திகள், சேமிப்புச்சக்திகள், நட்புச் சக்திகளை அணிதிரட்டுதல்.

அடிப்படைச் சக்திகள் - தாயக மக்களும் அதன் நீட்சியாகவுள்ள புலம்பெயர் உறவுகளும்.

சேமிப்புச் சக்திகள் - மலையக மக்கள், தமிழக மக்கள் உட்பட உலகவாழ் தமிழ் மக்கள். நட்புச் சக்திகள் - சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயகச் சக்திகள்.

 மக்கள் பங்கேற்பு அரசியலை வலுப்படுத்தல்.

 சர்வதேச சமூகத்தை எமக்குச் சார்பாகத் திரட்டுதல்.

 ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.

 தமிழ் மக்களுக்கென அதிகாரமையம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்.

 கிழக்கைப் பாதுகாப்பதற்கு தனியான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்.

 கடற்றொழில், விவசாயம், வணிகம், கைத்தொழில், அரசு, நிர்வாகம், கல்வி போன்ற துறைகளுக்கு துறைசார் நிபுணர்கள், அனுபவசாலிகள், ஆற்றலாளர்களை உள்ளடக்கிய சிந்தனை வங்கிகளை உருவாக்கி சூழலுக்கேற்ற தீர்மானங்களை நிறைவேற்றுதலும் செயற்படுத்துதலும்.

 பலமுனைகளிலும், கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன, மத, கலாசார, பண்பாட்டு ரீதியாக வலிந்து மேற்கொள்ளப்படும் சகல ஆக்கிரமிப்புகளையும் - துறைசார் அடக்குமுறைகளையும் பதிவுசெய்து, உடனடி எதிர்ப்புப் பொறிமுறைகளைக் கையாளக்கூடிய மக்கள் குறைகேள் சர்வதேச கண்காணிப்பு மையங்களை வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியே நிறுவுதல்.

 தமிழினத்தின் கலாசார, பண்பாட்டு மரபுரிமைகளையும், அடையாளங்களையும் நிபுணத்துவ பங்குபற்றலுடன் நிறுவி, நெறிப்படுத்தல்.

 ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் உள்ள சமூக அமைப்புகளின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளுக்கு வழிவகை செய்தல்.

கட்சியின் மேம்பாட்டுத் திட்டங்கள்

 தொண்டரிலிருந்து தலைமை வரை கட்டிறுக்கமான நிருவாக நடைமுறைகளையும், உட்கட்சி சனநாயகத்தையும் வலுவுள்ளதாக்கும் வகையில் கட்சியின் யாப்பு விதிகளை நேர்த்தியாக்குதல்.

 கட்சியின் இலக்குக் குறித்த தெளிவும் வினைத்திறனும் மிக்க நவீன ஊடகப்பரப்பைக் கட்டமைத்தல்.

 கட்சியின் தலைமைப் பணிமனை, மாவட்டப் பணிமனை என்பவற்றை முறையான கட்டமைப்புகளுடன் இயங்கு நிலையில் வைத்திருத்தல்.

 கட்சிக்கான சட்டரீதியான நிதியீட்டங்களை உறுதிப்படுத்தலும் கையாளலும்.

இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | Tna Election Sridharan Report For Eela Tamils Sl

 தமிழ்த்தேசியக் கொள்கை நிலைப்பாட்டோடு இயங்கும் ஏனைய தமிழத் தேசியக் கட்சிகளுடன் கொள்கைவழிப்பட்ட அரசியல் உறவுநிலையைப் பேணுதல். மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல்.

 அரசுடனும் ஏனைய அமைப்புக்களுடனுமான பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படைத் தன்மையைப் பேணுதல்.

 கட்சியின் நிருவாகக்கட்டமைப்பில் இளையோர்களை உட்சேர்த்தல்.

 முன்னாள் போராளிகளினுடைய அரசியல் மற்றும் தேசக்கட்டுமான அனுபவங்களை உள்வாங்கி, கட்சியின் நகர்வுகளில் அவர்களின் பங்கேற்பினையும் உறுதிப்படுத்துதல்.

 எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேர்தல்களிலும் தனிநபர்களின் சுயவிருப்புக்கேற்ப வேட்பாளர்களை நியமிக்காது, பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்துவதற்காக வெளிப்படையாகச் செயற்படல்.

 நிலத்திலும், புலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் இலக்குகளையும் அடைவதற்கான பொது வேலைத்திட்டத்திற்குரிய பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்தல்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025