தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தல்: மத அடையாளத்துக்கு அப்பால் பொருந்தாதா!
தமிழ் மக்களின் அரசியல் பிரபலம் தென்னிலங்கையின் அரசியலை மையப்படுத்திய வாத பிரதிவாதங்கள் இருந்தாலும், இன்றைய நிலையில் நாளை திருமலையில் நடைபெறவுள்ள தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தல் குறித்து தான் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றது.
தமது கட்சிக்கு புதிய தலைவராக வர கூடியவர் யார் என்பதை ஜனநாயக ரீதியில் அந்த கட்சியிலுள்ள சொற்ப வாக்காளர்களே முடிவு செய்யலாம் என்ற யதார்த்தம் இருந்தாலும் முகநூல் உட்பட்ட சமூகவலைத்தளங்களில் இதுவே பேசுபொருளாக உள்ளது.
இந்நிலையில் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தல் களத்தில் இறுதி நேரத்தில் இந்தியாவின் வெளியக புலனாய்வு பிரிவான “ரோ” வால் தான் சீனித்தம்பி யோகேஸ்வரன் களமிறக்கப்பட்டார் என்ற கருத்துக்களும் உலா வருகின்றன.
மேலும், கிறிஸ்தவரான சுமந்திரன் தமிழரக்கட்சியின் தலைவராக வரக்கூடாதென்ற நுட்பங்கள் பிரயோகிக்கப்படுவதாக தகவல்களும் உலா வருகின்றன.
இந்நிலையில், தமிழ் மக்களை பொருத்தவரை யார் தங்களுடைய தலைவராக வர வேண்டும் என்பதை மத அடையாளத்துக்கு அப்பால் நின்று நிரூபித்த பின்னணி தமிழரசுக்கட்சியின் உட்கட்சி தேர்தலுக்கு பொருந்தாதா என்ன என வினவப்பட்டுள்ளது.!
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |