வெளிநாடொன்றின் முக்கிய தூதுவரை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு தலைவர்கள்
meet
tamil national alliance
united states
By Jaso
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நாளை (07) புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பல அரசியல் விவகாரங்கள் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று பகல் இந்தசந்திப்பு நடந்தது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி