கூட்டமைப்பினரை கடுமையாக சாடிய விமல் வீரவன்ச
ஜெனிவா அமர்வு அண்மிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாடகங்களை அரங்கேற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய விமல் வீரவன்ச, ஜெனிவா தீர்மானத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இராணுவத்தினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவா தீர்மானம்
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 50 இற்கும் அதிகமான இராணுவத்தினரின் பெயர் பட்டியல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளக்கப்பட்டுள்ளன. எமக்கு தெரிந்த வகையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அந்தந்த நாடுகளில் வழக்குகளை தொடுக்க முடியும்.
சில வேளை தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகள் அதனால் இலாபமடையக் கூடும். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவத்தினர் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யாவிடின் சில வேளை இந்த நாட்டை பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்பட்ட இராணுவத்தினருக்கு இந்த விடயத்தின் அடிப்படையில் அநீதி இழைக்கப்படலாம்.
குருந்து விகாரை
இரண்டாவதாக குருந்து விகாரை என்பது, இந்த நாட்டிற்கு உரித்தான விகாரை. வடக்கு மற்றும் கிழக்கில் ஏதாவது பௌத்த புராதன விகாரை இருந்தால், அதற்கு பிரச்சினை ஏற்படுத்தப்படுகின்றது. அதற்கு வெளியே இந்து அல்லது ஏனைய மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. எனினும் யாரும் அதற்கு தடைகளை ஏற்படுத்துவதில்லை.
வடக்கு மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அல்லது மத ரீதியான பிரச்சினை முன்வைக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுன்ற உறுப்பினர்களே இதனை செய்கின்றனர்.
அவர்களே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சென்று தாக்க முற்பட்டிருந்தனர். தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அவர்களின் கடமைகளை செய்யவிடாது தடுத்துள்ளனர். அ
வ்வாறு செயற்பட்டுவிட்டு, இந்த நாட்டிற்கு உரித்தான, புராதன குருந்து விகாரைக்கு இன்று சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அது மிகவும் தவறானது. திருகோணமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்து ஆலயங்களுக்கு யாரும் எதாவது கூறுகின்றார்களா ? யாராவது அதனை பிரச்சினையாக்குகின்றார்களா?” என்றார்.
