வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - குடும்பஸ்தர் பரிதாபமாக பலி
accident
death
linthulai
By Vanan
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நானுஓயா சமர்செட் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் காட் கல்லில் மோதியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி