இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (07.10.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 10.30 வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் 04 வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை10.30 மணி முதல் மாலை 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும் 11.00 மணி முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்புப் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |