யாழில் இடம்பெற்ற மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி
யாழ்ப்பாணம் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ”ஆரோக்கிய சமூகமாய் வாழ்வோம் ” எனும் தொனிப்பொருளில் யாழில் விழிப்புணர்வு மரதன் விழா இடம்பெற்றது.
இன்று (25) காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு முன்றலில் ஆரம்பித்த மரதன் விழா வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தை சென்றடைந்து நிறைவுற்றது.
நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றல்
ஐபிசி தமிழின் ஊடக அனுசரணையில் இடம்பெற்ற இந்த மரதன் ஓட்டப் போட்டியில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் இருபாலரும் பங்குபற்றியிருந்தனர்.
மரதன் விழாவின் இறுதியில் விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
தினமும் சில மணித்துளிகள் நம் ஆரோக்கிய வாழ்வுக்காய் நடப்போம், ஓடுவோம், உடல் உழைப்பால், உடல் நலம் பேணுவோம் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மரதன் விழா ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |