கனடாவில் கோர விபத்து - 15 பேர் பலி(படங்கள்)
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர்.
குறித்த பேருந்தானது கார்பெரி பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக டிரெய்லர் டிரக் மீது வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், 25 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 முதியவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரங்கல் தெரிவித்த பிரதமர்
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் தகவலறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார்.
மனிடோபாவில் இருந்து வரும் செய்தி நம்பமுடியாத துயரமானது.
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
