கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும்16 பேர் உயிரிழந்துள்ளனர் எனசுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 30 வயதுக்குட்பட்டவர்களில் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை. 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆணொருவரும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளதுடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 ஆண்களும் 3 பெண்களுமாக பதின்மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,677 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று மேலும் 588 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 576,782 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து மேலும் 335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 546,103 ஆக அதிகரித்துள்ளது.