இலங்கையில் மேலும் 47 கொவிட் மரணங்கள் பதிவானது
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று நாட்டில் 2,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 207,943 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,670 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,045 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்