தங்க விலையில் வீழ்ச்சி : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றுடன் (11) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும் விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச பொருளாதார நகர்வுகள் காரணமாக உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |