அதிகாலையில் ஏற்பட்ட பாரிய விபத்து: 13 பேர் படுகாயம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நாகொட கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் 13 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை கலசேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தெற்கு நோக்கி திரும்ப முற்பட்ட போது குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
