இன்றைய நாடாளுமன்ற அமர்வு : எம்.பியாக பதவியேற்ற அப்துல் வாஸித்
புதிய இணைப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் (Mohamed Sheriff Abthul Wazeeth) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் (Muhammathu Saali Naleem) பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஹம்மது சாலி நளீம் ஏறாவூர் நகரசபையின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இன்றைய (07.07.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளுங்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
