இன்றைய நாடாளுமன்ற அமர்வு - இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பற்றிய விவாதம்
Sri Lanka Parliament
Sri Lanka Cricket
By Beulah
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
2022 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்ட வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய கணக்காய்வு வரைவு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றச்சாட்டுக்கள்

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் பதிலளித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானாவின் யோசனைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.