கட்சித் தலைவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பே தவிர சபாநாயகரின் பொறுப்பு அல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கூடும் நாட்களில் காலை 10.30 மணி வரை அமைச்சர்கள் சபையில் அமர்ந்து கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்றும் அதன் பின்னர் உத்தியோகபூர்வ பணிகளுக்காக விடுவிக்கப்படுவார்கள் என்றும் கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றம் இன்று (19) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு நடைபெற்ற உரையாடல் வருமாறு,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச -" கெளரவ சபாநாயகர் அவர்களே, அமைச்சர்கள் கேள்விகளுக்கு காலை 10.30 மணி வரை மட்டுமே பதில் அளிப்பார்கள் என இன்று காலை தான் அறிவித்தீர்கள் எனவே நாளை முதல் இதனை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்",இதை நான் நியாயம் என்று நினைக்கிறேன்.
தீர்மானம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன -” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு தாருங்கள்.ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபாநாயகர், கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த முடிவுகள் குறித்து எம்.பி.க்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும். அது உங்கள் வேலை இல்லை. 10.30 ஆகும் போது அமைச்சர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்பே கூறியிருந்தோம்”.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - “இந்த முடிவை நீங்கள் இன்று அறிவித்ததால் நாளை முதல் இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துங்கள். அது சாதாரணம்”.
சபையில் இணக்கம்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன - “அதற்கு சபையில் இணக்கம் காணப்பட வேண்டும்”.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - ”சபாநாயகரே இன்று காலை அனைத்து அமைச்சர்களும் இந்த சபையில் அமர்ந்திருந்தனர்.
எனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காலை 10.30 மணிக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் என்ற முறையில் அனைத்து அமைச்சர்களுக்கும் தெரிவித்தேன்.
இப்போது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். கேள்வி கேட்டாலும் பரவாயில்லை. ஆனால் அமைச்சர்கள் இல்லை”. என தெரிவித்தார்.