மின் தடை நேரத்தில் மாற்றம்! பொது மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
today
sri lanka
people
power failure
pucsl
By Thavathevan
இலங்கையில் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் A முதல் w வரையான பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அனைத்து வலயங்களிலும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், மின்னுற்பத்திக்காக எரிபொருளை வழங்குவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கள் எழுத்துமூலமாக உறுதியளித்துள்ளன.
இதற்கமைய, இந்திய கடனுதவியின் கீழ் நேற்று கிடைக்கப்பெற்ற டீசலில் 12 ஆயிரம் மெற்றிக் தொன் மின்னுற்பத்திக்காக வழங்கப்படவுள்ளது.
மேலும் லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்தும் ஆறாயிரம் மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி