யாழ் - செம்மணியில் மீண்டும் வெடித்த போராட்டம்...
Tamils
Jaffna
SL Protest
chemmani mass graves jaffna
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
வல்லமை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் இன்று (10) குறித்த நடைபவனியும் கவனயீர்ப்பு பேரணியும் முன்னெக்கப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மற்றும் வன்முறை சம்பவங்களால் உயிரிழந்த மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியை வேண்டியும் குற்றமிழைத்தவர்களுக்கான தண்டனையை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது ”கொலையுண்டவர்கள் நிலத்திற்கு கீழ் குற்றம் புரிந்தவர்கள் உல்லாச வெளியில்”, ”நாம் கேட்பது மன்னிப்பை அல்ல நீதியினை” போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி