யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்
''பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் இன்று(15) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மத்திய பேருந்து நிலைத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப்பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பதாதைகளைத் தாங்கியவாறு

இதன் போது ''சிங்கள, தமிழ், முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.