இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்
Srilanka
Death
corona
Recovered
By MKkamshan
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும்1,297 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 624,545 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 373 பேராக அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,975 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை15,723 ஆக அதிகரித்துள்ளது. .
