யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு
Sri Lankan Tamils
Jaffna
chemmani mass graves jaffna
By Dharu
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 19 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 09 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
செய்தி - தீபன்















