பிரித்தானியாவில் வசிப்போருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..!
தற்போது பிரித்தானியாவை தாக்கிவரும் ஆண்டனி புயல் தொடர்பில் வானிலை ஆராய்ச்சி மையம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
லண்டன் உட்பட தென்கிழக்கு இங்கிலாந்தில் விடுக்கப்பட்டுள்ள இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் 22:00 BST உடன் முடிவடையும் எனவும், கார்டிஃப் மற்றும் பாத் உள்ளிட்ட மேற்குப் பகுதிகளில் மஞ்சள் காற்று எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை ஒரே இரவில் காற்றின் வேகம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
அத்துடன், தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 65 கிலோமீற்றர் வேகம் வரையில் பலத்த காற்று வீசலாம் என்றும், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனவே பொது மக்கள் வாகனங்களில் வெளியில் செல்லவோ அல்லது தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளவோ வேண்டாம் என்றும், வாகன சாரதிகள் கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.