இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை' மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை' (Caution) மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும் அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |