வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்காலிக பலத்த காற்று
அத்தோடு, வடமேற்கு மாகாணத்தில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடி மின்னலுடன் கூடிய மழையுடனான தற்காலிக பலத்த காற்றினால் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
