நாட்டில் கனமழை பெய்யும் சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Sri Lankan Peoples
Climate Change
Weather
By Shadhu Shanker
நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேற்கு, தென் வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
முன்னெச்சரிக்கை
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புன்னகையால் புலிகளின் மனோபலத்தை பறைசாற்றிய அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன்
18 மணி நேரம் முன்ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு…
3 நாட்கள் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி