ராஜபக்சர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்! கனடாவிலிருந்து வலியுறுத்து
ராஜபக்சர்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் (Pierre Poilievre) வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே பியெர் பொலிவ்ர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்கவேண்டும்.
அத்துடன், கொன்சவேட்டிவ் கட்சியின் ப்ரியன் மல்ரொனியே முதன்முறையாக தமிழர்களுக்கு கனடாவுக்குள் இடமளித்தார்.
தமது கட்சியைச் சேர்ந்த ஜோன் பெய்ர்ட் மற்றும் ஸ்டீவன் ஹார்பர் ஆகியோர் கடந்தகால அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்தனர்.
எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் கொன்சவேட்டிவ் கட்சி நீண்டகாலமாக நேர்மறையான விதத்தில் செயற்பட்டுவந்திருக்கின்றது.
அதுமாத்திரமன்றி தமிழினப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |