எம்.பி பதவி பறிபோகும் அபாயம் : தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக உபசரிப்புகளை வழங்கும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்படும் வேட்பாளர்களை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்து அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக இவ்வாறான விடயங்களை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) கருத்து வெளியிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இவ்வாறு வாக்காளர்களை மகிழ்விப்பது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதுடன் பணம் இல்லாத மற்ற வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதி எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக தேர்தல் வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஹோட்டல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு சமீபத்தில் பல முக்கிய ஹோட்டல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இவ்வாறு கண்டியில் (Kandy) உள்ள ஹோட்டல்களுக்கே பெரும்பாலான கடிதங்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |