மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை பாதிப்படைந்துள்ள கடற்றொழில் நடவடிக்கைகள்
Mannar
Sri Lanka Fisherman
Weather
By Shadhu Shanker
மன்னார்(Mannar) மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்துவரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (23) வீசி வரும் அதீத காற்று காரணமாக கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர்.
குறிப்பாக தாழ்வுபாடு,செளத்பார்,பேசாலை கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நடவடிக்கையை தவிர்த்துள்ளனர்.
தொடரும் சீரற்ற காலநிலை
வீசி வரும் அதிக காற்று காரணமாக கடல் அலைகளும் அதிகம் காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் தங்கள் கடற்றொழில் வள்ளங்கள் வலைகள் உட்பட்ட உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளனர்.
அதே நேரம் காற்றின் வேகம் காரணமாக கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்கள் வாடிகளும் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்