இன்றைய நாளுக்கான வானிலை அறிவித்தல்
இன்று(04) நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளிலும் மற்றும் மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஒரு கிலோ மீற்றருக்கு 40-45 வரையிலாக பலத்த காற்று வீசக்கூடும்.
சூரிய உச்சம்
சூரியன் தெற்கு நோக்கி நகரும்போது, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.

நாளை நண்பகல் 12:09 மணிக்கு கொச்சிக்கடை, மாவனெல்ல, பேராதனை, கலஹிட்டியாவ (பதுளை மாவட்டம்), டானிகல (மொனராகலை மாவட்டம்) மற்றும் பரகஹகலே (அம்பாறை மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.