வவுனியா மாவட்டத்தில் 83 வீதமான மழை வீழ்ச்சி : வெளியான தகவல்
புதிய இணைப்பு
வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் 2024 ஜனவரி தொடக்கம் டிசம்பர் 19 வரை 83 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை வவுனியா மாவட்ட மழைவீழ்ச்சி தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1400 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது.
மழை வீழ்ச்சி
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 994.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், வருகின்ற 40 நாட்களிற்குள் 300 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும்.
இந்த வருடம் குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும்.
நவம்பர் இறுதி, டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (20.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |