நாட்டில் இன்றிரவு கொட்டித் தீர்க்கப் போகும் மழை
நாட்டில் இன்று (19) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக
இடியுடன் கூடிய மழை
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கன மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, மேற்கு, கிழக்கு, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்