நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மழை - இன்றைய வானிலை
Department of Meteorology
Climate Change
Weather
By Vanan
முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தேசிய வளிமண்டலவியல் நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் இன்று(21) காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரான வானிலை

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்தியமற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி