நாளை அனைத்து மதுபானசாலைகளும் மூடுவதற்கு அறிவிப்பு!
Sri Lanka
Sri Lankan Peoples
Excise Department of Sri Lanka
By Dilakshan
உலகளாவிய ரீதியில் நாளைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03.10.2023) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிப்பதனாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், நாளைய தினம் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்