நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் உடனடியாக எரிபொருள் ஓடர்கள் பெறுவதை மீண்டும் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் சங்கத்தின் பிரதி தவிசாளர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபான தவிசாளருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் மூலம் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்தின் போது விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3 வீத தள்ளுபடி இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் இருந்து சம்பந்தபட்ட சங்கம் விலகுவதாக அறிவித்திருந்தது.
அதன் காரணமாக மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்று பீதியடைந்த மக்கள், எரிபொருள் நிலையங்களில் குவிந்து வரிசையில் நின்று கொள்வனவில் ஈடுபட்டனர்.
எனினும், நாட்டில் மீண்டும் ஒரு எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றும் தற்போது போதுமான எரிபொருள்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
