இந்தியாவை உலுக்கிய 10 மோசமான விமான விபத்துகள்!

India World Air India
By Sathangani Jun 13, 2025 08:41 PM GMT
Report

இந்தியாவின் - குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (12) ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.

தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: திருப்பி விடப்பட்ட சிறிலங்கன் விமானம்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: திருப்பி விடப்பட்ட சிறிலங்கன் விமானம்

 10 மோசமான விமான விபத்துகள்

இந்தநிலையில் இந்தியாவில் இதற்கு முன்பும் பல விமான விபத்துக்கள் நடந்த நிலையில் 10 மோசமான விமான விபத்துகளாக பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

1978ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மும்பையிலிருந்து 213 பேருடன் புறப்பட்ட போயிங் 747 விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் இதில் 213 பேர் உயிரிழந்தனர்.

1982ஆம் ஆண்டு ஜூன் 21ம் திகதி மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவை உலுக்கிய 10 மோசமான விமான விபத்துகள்! | Top 10 Most Deadliest Plane Crashes In History

1988ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி அகமதாபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 133 பேர் உயிரிழந்தனர்.

1990ஆம் ஆண்டு பெப்ரவரி 14இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூர் அருகே விபத்துக்குள்ளானதில் 92 பேர் உயிரிழந்தனர்.

1991ஆம் ஆண்டு ஓகஸ்ட்16இல் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1993ஆம்ஆண்டு ஏப்ரல் 26இல் மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் டிரக் மற்றும் மின்சார கம்பங்கள் மீது மோதியதில் 55 பேர் உயிரிழந்தனர். 

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

 349 பேர் உயிரிழப்பு 

1996ஆம் ஆண்டு நவம்பர் 12இல் சவுதி அரேபியாவின் போயிங் விமானமும், கஜகஸ்தானின் விமானமும் டில்லி அருகே மோதிக் கொண்டன. விமானிகளின் தவறு காரணமாகவும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தவறான தகவல் தொடர்பாலும் நடந்த விபத்தில் 349 பேர் உயிரிழந்தனர்.

2000ஆம் ஆண்டு ஜூலை 17இல் அலையன்ஸ்ஏர் நிறுவனத்தின் போயிங் விமானம் தரையிறங்கம்போது விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்தனர். விமானியின் தவறால், கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்தது.

இந்தியாவை உலுக்கிய 10 மோசமான விமான விபத்துகள்! | Top 10 Most Deadliest Plane Crashes In History

2010ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் விழுந்து உடைந்தது. இதில் 158 பேர் உயிரிழந்தனர்.

2020இல் கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகி ஓடுபாதையை விட்டு விலகி இரண்டு துண்டானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இந்திய வரலாற்றில் 1996இல் நடந்த விமான விபத்தில் 349 பேர் உயிரிழந்ததே மிகப்பெரிய அனர்த்தமாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் பதற்றம் : அதிரடியாக திருப்பி விடப்பட்ட 16 இந்தியா விமானங்கள்

அதிகரிக்கும் பதற்றம் : அதிரடியாக திருப்பி விடப்பட்ட 16 இந்தியா விமானங்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026