சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!
சுவிட்சர்லாந்தில் சில துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் வெற்றிடமாக விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி 15 துறைகளுக்கு அதிக அளவில் பணியாளர்கள் தேவைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டிலும் குறித்த துறைகளில் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பம்
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக அமைப்பு நாடுகளைச் சேராதவர்கள், சுவிட்சர்லாந்தில் பணி செய்யவேண்டுமானால் பணி விசா பெறவேண்டும் என கூறப்படுகிறது.
அத்துடன், முன்கூட்டியே சுவிஸ் நிறுவனங்களிலிருந்து பணி சலுகை பெறுவதுடன், அந்த குறிப்பிட்ட பணிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக அமைப்பு நாடுகளைச் சேராதவர்கள், அதாவது, மூன்றாவது நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை பணி வழங்குபவர் மூலம் உறுதி செய்வதும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விசா பெறும் விதிகள்
அதுமட்டுமல்லாமல், இந்த மூன்றாம் நாட்டவர்கள், பணி விசா பெறுவது எளிதாக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் பணி செய்வதற்கான விசா பெறும் விதிகளை கடந்த ஆண்டு எளிதாக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அதிக அளவில் வெற்றிடங்கள் காணப்பட்ட துறைகள் பின்வருமாறு..
Care Specialist / Nurse (6,395)
Electrician (6,337)
Sales advisor (4,056)
Carpenter (3,337)
Project manager (3.256)
Software developer (3.187)
Polymechanic (3.128)
Healthcare specialist (2.625)
Service technician (2.606)
Commercial clerk (2.559)
Sanitary installer (2,541)
Logistics Specialist (2,521)
Automation specialist (2,459)
Retail trade specialist (2,443)
Cooks (2,407)
இந்த துறைகளில் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.