மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். செல்வாக்கு வெளிப்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். வெள்ளிக்கிழமை கவனம் தேவை.

வெள்ளி சனிக்கிழமையில் அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.
புதிய சொத்து வாங்கும்போதும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் படித்துப் பார்ப்பது அவசியம். சனி ஞாயிறுக்கிழமைகளில் கவனம் தேவை.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். நவீன பொருள் வாங்குவீர்.

ஆறாமிட சூரியனால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்பு விலகும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வழக்கு சாதகமாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் அமைதியான நிலவும்.வியாபாரத்தில் லாபம் சற்று அதிகமாக இருக்கும்.
புதிய திட்டங்களில் ஈடுபட ஏற்ற நேரம் இது. குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும், பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும்.
மிதுனம்
குரு பார்வையுடன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஆரோக்யம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் நிலை உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும்.
பணப்புழக்கத்தை அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். வெளிநாட்டு முயற்சியை சாதகமாக்குவார்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானுக்கு குரு பார்வை கிடைப்பதால் நினைத்ததை சாதிப்பீர். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொழிலில் முன்னேற்றம் அடையும். பண நெருக்கடி நீங்கும். அனைத்திலும் பொறுமை காப்பது நன்மையாகும்.

சில இடங்களில் வேலை சவாலாக இருக்கும், சில இடங்களில் போராட்டமாக இருக்கும்.
உத்தியோக ரீதியாக சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் நடக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் எச்சரிக்கையாக ஈடுபடலாம்.
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி உற்சாகம் பெருகும், பிள்ளைகளால் சில சிக்கல்கள் வரலாம்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக ஏற்றமான பலன்கள் இருக்கும். குருவும் அவருடைய பார்வையும் செல்வாக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பம் நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை.
தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபம் உண்டாகும். பாக்ய குருவால் பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து சேரும்.
செவ்வாய்க்கு குரு பார்வை உண்டாவதால் தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப செயல் நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |